ஒண்பொறிக் கழற்கால்
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · தும்பையரவம்
ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தேஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால்இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர்செவ்உளைய மாஊர்ந்துநெடும்கொடிய தேர்மிசையும்ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்பொன்அணி யானை முரண்சேர் எருத்தினும்மன்நிலத்(து) அமைந்த ..................மாறா மைந்தர் மாறுநிலை தேயமுரை(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழஅரைசுபடக் கடக்கும் ஆற்றல்புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · தும்பையரவம்