பரிசிலர் வெறுக்கை
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு
உலகத் தோரே பலர்மன் செல்வர்எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமேவளம்தலை மயங்கிய பைதிரம் திருத்தியகளங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்எயில்முகம் சிதையத் தோட்டி ஏவலின்தோட்டி தந்த தொடிமருப்பு யானைச்செவ்உளைக் கலிமா ஈணகை வான்கழல்செயல்அமை கண்ணிச் சேரலர் வேந்தேபரிசிலர் வெறுக்கை பாணர் நாளவைவாள்நுதல் கணவ! மள்ளர் ஏறே!மைஅற விளங்கிய வடுவாழ் மார்பின்வசையில் செல்வ! வான வரம்ப!இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்தருகென விழையாத் தாஇல் நெஞ்சத்துப்பகுத்(து)ஊண் தொகுத்த ஆண்மைப்பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே.
நான்காம் பத்து · காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது · பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் · செந்துறைப் பாடாண்பாட்டு