verse 28 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 28 · உருத்துவரு மலிர்நிறை

திருவுடைத்(து) அம்ம பெருவிறல் பகைவர்பைங்கண் யானைப் புணர்நிரை துமியஉரம்துரந்(து) எறிந்த கறைஅடிக் கழல்கால்கடுமா மறவர் கதழ்தொடை மறப்பஇளைஇனிது தந்து விளைவுமுட்(டு) உறாதுபுலம்பா உறையுள் நீணதொழில் ஆற்றலின்விடுநிலக் கரம்பை விடர்அளை நிறையக்கோடை நீடக் குன்றம் புல்லெனஅருவி அற்ற பெருவறல் காலையும்நிவந்துகரை இழிதரு நனம்தலைப் போ஢யாற்றுச்சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்செந்நீர்ப் பூசல் அல்லதுவெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.
Share
கதை

உருத்துவரு மலிர்நிறை

மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · நாடுவாழ்த்து