verse 23 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 23 · ததைந்த காஞ்சி

அலந்தலை உன்னத்(து) அங்கவடு பொருந்திச்சிதடி கரையப் பெருவறம் கூர்ந்துநிலம்பை(து) அற்ற புலம்கெடு காலையும்வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்மன்றம் போந்து மறுகுசிறை பாடும்வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்பொன்செய் புனைஇழை ஒலிப்பப் பொ஢(து)உவந்துநெஞ்சுமலி உவகையர் உண்டுமலிந்(து) ஆடச்சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவநின்நயந்து வருவேம் கண்டனம் புல்மிக்குவழங்குநர் அற்(று)என மருங்குகெடத் தூர்ந்துபெருங்கவின் அழிந்த ஆற்ற ஏறுபுணர்ந்(து)அண்ணல் மரைஆ அமர்ந்(து)இனி(து) உறையும்விண்உயர் வைப்பின கா(டு)ஆ யினநின்மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்தபோர்எதிர் வேந்தர் தார்அழிந்(து) ஒராலின்மரு(து)இமிழ்ந்(து) ஓங்கிய நளிஇரும் பரப்பின்மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடுமுருக்குத்தாழ்(பு) எழிலிய நெருப்புறழ் அடைகரைநந்து நாரையொடு செவ்வா஢ உகளும்கழனி வாயிற் பழனப் படப்பைஅழல்மருள் பூவின் தாமரை வளைமகள்குறாஅது மலர்ந்த ஆம்பல்அறாஅ யாணர்அவர் அகன்தலை நாடே.
Share
கதை

ததைந்த காஞ்சி

மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு