verse 19 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 19 · வளனறு பைதிரம்

கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர்கல்உடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்பஒண்பொறிக் கழல்கால் மாறா வயவர்தின்பிணி எஃகம் புலிஉறை கழிப்பச்செங்கள விருப்பொடு கூலம் முற்றியஉருவச் செந்தினை குருதியொடு தூஉய்மண்ணுறு முரசம் கண்பெயர்த்(து) இயவர்கடிப்(பு)உடை வலத்தர் தொடித்தோள் ஓச்சவம்புகளை(வு) அறியாச் சுற்றமோ(டு) உடம்புதெரிந்(து)அவ்வினை மேவலை ஆகலின்எல்லும் நனிஇருந்(து) எல்லிப் பெற்றஅ஡஢துபெறு பாயல்சிறுமகி ழானும்கனவினுள் உறையும் பெருஞ்சால்(பு) ஒடுங்கியநாணுமலி யாக்கை வாள்நுதல் அரிவைக்(கு)யார்கொல் அளியைஇனம்தோ(டு) அகல ஊருடன் எழுந்துநிலம்கண் வாட நாஞ்சில் கடிந்துநீவாழ்தல் ஈயா வளன்அறு பைதிரம்அன்ன ஆயின பழனம் தோறும்அழல்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்துநெல்லின் செறுவில் நெய்தல் பூப்பஅரிநர் கொய்வாள் மடங்க அறைநர்தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்தஇன்றோ அன்றோ தொன்றோர் காலைநல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக்காணுநர் கைபுடைத்(து) இரங்கமாணா மாட்சிய மாண்டன பலவே.
Share
கதை

வளனறு பைதிரம்

இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு