துயிலின் பாயல்
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு
கோ(டு)உறழ்ந்(து) எடுத்த கொடுங்கண் இஞ்சிநாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்துஞ்சுமரக் குழாஅம் துவன்றிப் புனிற்றுமகள்பூணா ஐயவி தூக்கிய மதிலநல்எழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லு(பு)ஏனம் ஆகிய நுனைமுரி மருப்பின்கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்திமரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறைநீடினை ஆகலின் காண்குவந் திசினேஆறிய கற்பின் அடங்கிய சாயல்ஊடினும் இனிய கூறும் இன்நகைஅமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்பாயல் உய்யுமோ தோன்றல் தாவின்றுதிருமணி பொருத திகழ்விடு பசும்பொன்வயங்குகதிர் வயிரமோ(டு) உறழ்ந்துபூண் சுடர்வரஎழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்புரையோர் உண்கண் துயிலின் பாயல்பாலும் கொளாலும் வல்லோய்நின்சாயன் மார்பு நனிஅலைத் தன்றே.
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு