verse 13 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 13 · பூத்த நெய்தல்

தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின்வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்ஒலிதெங்கின் இமிழ்மருதின்புனல்வாயில் பூம்பொய்கைப்பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்நாடுகவின் அழிய நாமம் தோற்றிக்கூற்(று)அடூஉ நின்ற யாக்கை போலநீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்விரிபூங் கரும்பின் கழனி புல்எனத்திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்கவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்கஊரிய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்தா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்துள்ளுநர் பனிக்கும் பாழா யினவேகாடே கடவுள் மேன புறவேஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேனஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்குடிபுறம் தருநர் பாரம் ஓம்பிஅழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாதுமழைவேண்டு புலத்து மாரி நிற்பநோயொடு பசிஇகந்(து) ஒரீஇப்பூத்தன்று பெருமநீ காத்த நாடே.
Share
கதை

பூத்த நெய்தல்

இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · செந்துறைப் பாடாண்பாட்டு