கூந்தல் விறலியர்
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · இயன்மொழி வாழ்த்து
உண்மின் கள்ளே அடுமின் சோறேஎறிக திற்றி ஏற்றுமின் புழுக்கேவருநர்க்கு வரையாது பொலம்கலம் தெளிர்ப்பஇருள்வணர் ஒலிவரும் புரிஅவிழ் ஐம்பால்ஏந்துகோட்(டு) அல்குல் முகிழ்நகை மடவரல்கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பேபெற்ற(து) உதவுமின் தப்(பு)இன்று பின்னும்மன்உயிர் அழிய யாண்டுபல துளக்கிமண்உடை ஞாலம் புர(வு)எதிர் கொண்டதண்இயல் எழிலி தலையாது மாறிமாரி பொய்க்குவ(து) ஆயினும்சேர லாதன் பொய்யலன் நசையே.
இரண்டாம் பத்து · குமட்டூர்க் கண்ணனார் பாடியது · பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் · இயன்மொழி வாழ்த்து