verse 21 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 21 · அடுநெய்யாவுதி

சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம்என்(று)ஐந்(து)உடன் போற்றி அவைதுணை ஆகஎவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்காலை அன்ன சீர்சால் வாய்மொழிஉருகெழு மரபின் கடவுள் பேணியர்கொண்ட தீயின் சுடர்எழு தோறும்விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதிவருநர் வரையார் வார வேண்டிவிருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறைகுய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்அடுமை எழுந்த அடுநெய் ஆவுதிஇரண்(டு)உடன் கமழும் நாற்றமொடு வானத்துநிலைபெறு கடவுளும் விழைதகப் பேணிஆர்வளம் பழுனிய ஐயம்தீர் சிறப்பின்மாரிஅம் கள்ளின் போர்வல் யானைப்போர்ப்(பு)உறு முரசம் கறங்க ஆர்ப்புச்சிறந்துநன்கலம் தரூஉம் மண்படு மார்பமுல்லைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பிக்கல்உயர் கடத்(து)இடைக் கதிர்மணி பெறூஉம்மிதிஅல் செருப்பின் பூழியர் கோவேகுவியல் கண்ணி மழவர் மெய்ம்மறைபல்பயம் தழீஇய பயம்கெழு நெடுங்கோட்டுநீர்அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்பார்வல் கொக்கின் பா஢வேட்(பு) அஞ்சாச்சீர்உடைத் தேஎத்த முனைகெட விலங்கியநேர்உயர் நெடுவரை அயிரைப் பொருநயாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்துநோயின் மாந்தர்க்(கு) ஊழி ஆகமண்ணா வாயின் மணம்கமழ் கொண்டுகார்மலர் கமழும் தாழ்இரும் கூந்தல்ஒ஡ணஇயின போல விரவுமலர் நின்றுதிருமுகத்(து) அலமரும் பெருமதர் மழைக்கண்அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்துவேய்உறழ் பணைத்தோள் இவளோ(டு)ஆயிர வெள்ளம் வாழிய பலவே.
Share
கதை

அடுநெய்யாவுதி

மூன்றாம் பத்து · பாலைக் கெளதமனார் பாடியது · பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் · செந்துறைப் பாடாண்பாட்டு