verse 55 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 55 · துஞ்சும் பந்தர்

ஆன்றோள் கணவ சான்றோர் புரவலநின்நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவஇன்இசைப் புணரி இரங்கும் பெளவத்துநன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத்தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருநசெவ்வூன் தோன்றா வெண்துவை முதிரைவால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறைகுடவர் கோவே கொடித்தேர் அண்ணல்வாரார் ஆயினும் இரவலர் வேணடித்தேரின் தந்(து)அவர்க்(கு) ஆர்பதம் நல்கும்நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்பெய்துபுறம் தந்து பொங்கல் ஆடிவிண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்சென்றா லியரோ பெரும அல்கலும்நனம்தலை வேந்தர் தார்அழிந்(து) அலறநீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டுபொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்தாங்குநர்த் தகைத்த வொள்வாள்ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே.
Share
கதை

துஞ்சும் பந்தர்

ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · செந்துறைப்பாடாண்பாட்டு