verse 60 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 60 · மரம்படுதீங்கனி

கொல்வினை மேவற்றுத் தானை; தானேஇகல்வினை மேவலன் தண்டாது வீசும்செல்லா மோதில் பாண்மகள் காணியர்மிஞிறுபுறம் மூசவும் தீம்சுவை தி஡஢யா(து)அரம்போழ் கல்லா மரம்படு தீம்கனிஅம்சே(று) அமைந்த முண்டை விளைபழம்ஆறுசெல் மாக்கட்(கு) ஓய்தகை தடுக்கும்மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்தொடைமடி களைந்த சிலைஉடை மறவர்பொங்குபிசிர்ப் புணா஢ மங்குலொடு மயங்கிவருங்கடல் ஊதையின் பனிக்கும்துவ்வா நறவின் சாயினத் தானே.— பதிகம் —குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்துவான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கிஏனை மழவரைச் செருவின் சுருக்கிமன்னரை ஓட்டிக்குழவிகொள் வாரின் குடிபுறந் தந்துநாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்ஆடுகோட் பாட்டுச் சேரலாதனையாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்காக்கைபாடினியார் நச்செள்ளையார்பாடினார் பத்துப் பாட்டு.அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர்திங்கள், மரம்படுதீங்கனி. இவை பாட்டின் பதிகம்.பாடிப்பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறயிரங்காணமும் கொடுத்துத் தன்பக்கத்துக்கொண்டான் அக்கோ.ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பதெட்டியாண்டு வீற்றிருந்தான்.
Share
கதை

மரம்படுதீங்கனி

ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · விறலியாற்றுப்படை