நாள்மகிழிருக்கை
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்பாஉடை நல்மா விரிஉளை சூட்டிமலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்தகாஞ்சி சான்ற வயவர் பெருமவில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வபூண்அணிந்(து) எழிலிய வனைந்துவரல் இளமுலைமாண்வரி அல்குல் மலர்ந்த நோக்கின்வேய்புரை(பு) எழிலிய விளங்(கு)இறைப் பணைத்தோள்காமர் கடவுளும் ஆளும் கற்பின்சேண்நாறு நறுநுதல் சேஇழை கணவபாணர் புரவல பரிசிலர் வெறுக்கைபூண்அணிந்து விளங்கிய புகழ்சால் மார்பநின்நாள்மகிழ் இருக்கை இனிதுகண் டிகுமேதீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச்வேறுசெய் மாரியின் அளிக்கும்நின்சாறுபடு திருவின் நனைமகி ழானே.
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு