மண்கெழுஞாலம்
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடிவரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்கால்உறு கடலின் கடிய உரறஎறிந்துசிதைந்த வாள்இலை தெரிந்த வேல்பாய்ந்(து)ஆய்ந்த மாஆய்ந்துதொந்த புகல்மறவரொடுபடுபிணம் பிறங்க நூறிப் பகைவர்கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தேநின்போல், அசைவில் கொள்கையர் ஆகலின் அசையா(து)ஆண்டோ ர் மன்றஇம் மண்கெழு ஞாலம்நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்பவிசும்புமெய் அகலப் பெயல்புர(வு) எதிரநால்வேறு நனம்தலை ஓராங்கு நந்தஇலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு