verse 70 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 70 · பறைக்குரல் அருவி

களிறுகடைஇய தாள்மாஉடற்றிய வடிம்புசமம்ததைந்த வேல்கல்அலைத்த தோள்வில்அலைத்த நல்வலத்துவண்(டு)இசை கடாவாத் தண்பனம் போந்தைக்குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டுதீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கிஉடைநிலை நல்அமர் கடந்து மறம்கெடுத்துக்கடும்சின வேந்தர் செம்மல் தொலைத்தவலம்படு வான்கழல் வயவர் பெருமநகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்புறம்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்கற்(பு)இறை கொண்ட கமழும் சுடர்நுதல்புரையோள் கணவ பூண்கிளர் மார்பதொலையாக் கொள்கை சுற்றம் சுற்றவேள்வியின் கடவுள் அருத்தினை கேள்விஉயர்நிலை உலகத்(து) ஐயர்இன்(பு) உறுத்தினைவணங்கிய சாயல் வணங்கா ஆண்மைஇளம்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்மாடோ ர் உறையும் உலகமும் கேட்பஇழும்என இழிதரும் பறைக்குரல் அருவிமுழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்அயிரை நெடுவரை போலத்தொலையா(து) ஆகநீ வாழும் நாளே.— பதிகம் —மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்தநெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தைஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டிவெருவரு தானை கொடுசெருப் பலகடந்(து)ஏத்தல் சான்ற இடன்உடை வேள்விஆக்கிய பொழுதின் அறத்துறை போகிமாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்புரோசு மயக்கிமல்லல் உள்ளமொடு மாசற விளங்கியசெல்வக்கடுங்கோ வாழிஆதனைக்கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.அவைதாம்: புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்ஞெழுஞாலம், பறைக்குரலருவி. இவை பாட்டின் பதிகம்.பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன்கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
Share
கதை

பறைக்குரல் அருவி

ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு