verse 75 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 75 · தீம்சேற்று யாணர்

இரும்புலி கொன்று பெரும்களி(று) அடூஉம்அரும்பொறி வயமான் அனையை பல்வேல்பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறையவேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்துநின்வழிப் படாஅர் ஆயின் நெல்மிக்(கு)அறைஉறு கரும்பின் தீம்சேற்(று) யாணர்வருநர் வரையா வளம்வீங்(கு) இருக்கைவன்புலம் தழீஇ மென்பால் தோறும்அரும்பறை வினைஞர் புல்இகல் படுத்துக்கள்உடை நியமத்(து) ஒள்விலை கொடுக்கும்வெள்வர(கு) உழுத கொள்உடைக் கரம்பைச்செந்நெல் வல்சி அறியார் தத்தம்பாடல் சான்ற வைப்பின்நா(டு)உடன் ஆடல் யாவண(து) அவர்க்கே.
Share
கதை

தீம்சேற்று யாணர்

எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு