verse 73 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 73 · நிறந்திகழ் பாசிழை

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்பிறர்உவமம் ஆகா ஒருபெரு வேந்தேமருதம் சான்ற மலர்தலை விளைவயல்செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்இரவும் பகலும் பாசிழை களையார்குறும்பல் யாணர்க் குரவை அயரும்காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!கழைவிரிந்(து) எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக்கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!நின்வளனும் ஆண்மையும் கைவண் மையும்மாந்தர் அள(வு)இறந் தனஎனப் பல்நாள்யான்சென்(று) உரைப்பவும் தேறார் பிறரும்சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லெனஆங்குமதி மருளக் காண்குவல்யாங்(கு)உரைப் பேன்என வருந்துவல் யானே.
Share
கதை

நிறந்திகழ் பாசிழை

எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு