verse 72 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 72 · உருத்(து)எழு வெள்ளம்

இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார்சூழாது துணிதல் அல்லது வறி(து)உடன்காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்முன்திணை முதல்வர்க்(கு) ஓம்பினர் உறைந்துமன்பதை காப்ப அறிவுவலி உறுத்துநன்(று)அறி உள்ளத்துச் சான்றோர் அன்னநின்பண்புநன்(கு) அறியார் மடம்பெரு மையின்துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலைநிலம்பொறை ஒராஅநீர் ஞெமரவந்(து) ஈண்டிஉரவுத்திரை கடுகிய உருத்(து)எழு வெள்ளம்வரையா மாதிரத்(து) இருள்சேர்பு பரந்துஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்(து)அஞ்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப்பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்மடங்கல் தீயிஅ அனையைசினம்கெழு குருசில்நின் உடற்றிசி னோர்க்கே.
Share
கதை

உருத்(து)எழு வெள்ளம்

எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு