verse 77 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 77 · வென்(று)ஆடு துணங்கை

எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்எனறனிர் ஆயின் ஆறுசெல் வம்பலீர்மன்பதை பெயர அரசுகளத்(து) ஒழியக்கொன்றுதோள் ஓச்சிய வென்(று)ஆடு துணங்கைமீபிணத்(து) உருண்ட தேயா ஆழியின்பண்அமை தேரும் மாவும் மாக்களும்எண்ணற்(கு) அருமையின் எண்ணின்றோ இலனேகந்துகோள் ஈயாது காழ்பல முருக்கிஉகக்கும் பருந்தின் நிலத்துநிழல் சாடிச்சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்ஆபரந் தன்ன செலவின்பல்யானை காண்பல்அவன் தானை யானே.
Share
கதை

வென்(று)ஆடு துணங்கை

எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · உழிஞை அரவம்