நலம்பெறு திருமணி
எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாதுவேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்வேறுபடு திருவின் நின்வழி வாழியர்கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்வரைஅகம் நண்ணிக் குறும்பொறை நாடித்தெரியுநர் கொண்ட சிர(று)உடைப் பைம்பொறிக்கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பின்புள்ளி இரலைத் தோல்ஊன் உதிர்த்துத்தீதுகளைந்(து) எஞ்சிய திகழ்விடு பாண்டில்பருதி போகிய புடைகிளை கட்டிஎஃ(கு)உடை இரும்பின் உள்அமைத்து வல்லோன்சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்விசும்(பு)ஆடு மரபின் பருந்(து)ஊ(று) அளப்பநலம்பெறு திருமணி கூட்டு நல்தோள்ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் கருவில்எண்இயல் முற்றி ஈர்அறிவு புரிந்துசால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்காவற்(கு) அமைந்த அரசுதுறை போகியவீறுசால் புதல்வன் பெற்றனை இவணர்க்(கு)அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்பஅன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனைவண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்தெய்வமும் யாவதும் தவம்உடை யோர்க்கெனவேறுபடு நனம்தலைப் பெயரக்கூறினை பெருமநின் படிமை யானே.
எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப் பாடாண்பாட்டு