நிறம்படு குருதி
எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப்பாடாண்பாட்டு
உயிர்போற் றலையே செருவத் தானேகொடைபோற் றலையே இரவலர் நடுவண்பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்திநின்வயின் பிரிந்த நல்இசை கனவினும்பிறர்நசை அறியா வயங்குசெந் நாவின்படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர்தோளிடைக் குழைந்த கோதை மார்பஅனைய அளப்(ப)அருங் குரையை அதனால்நின்னொடு வாரார் தம்நிலத்(து) ஒழிந்துகொல்களிற்(று) யானை எருத்தம் புல்லெனவில்குலை அறுத்துக் கோலின் வாராவெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்(து)அவர்அர(சு)உவா அழைப்பக் கோ(டு)அறுத்(து) இயற்றியஅணங்(கு)உடை மரபின் கட்டில்மேல் இருந்துதும்பை சான்ற மெய்தயங்(கு) உயக்கத்துநிறம்படு குருதி புறம்படின் அல்லதுமடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்கடவுள் அயிரையின் நிலைஇக்கேடில ஆக பெரும்நின் புகழே.
எட்டாம் பத்து · அரிசில்கிழார் பாடியது · பாடப்பட்டோன்: பெருஞ்சேரல் இரும்பொறை · செந்துறைப்பாடாண்பாட்டு