verse 68 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 68 · ஏமவாழ்க்கை

கால்கடிப்(பு) ஆகக் கடல்ஒலித் தாங்குவேறுபுலத்(து) இறுத்த கட்டூர் நாப்பண்கடும்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்அகல்இரு விசும்பின் ஆகத்(து) அதிரவெவ்வரி நிலைஇய எயில்எறிந்(து) அல்ல(து)உண்ணா(து) அடுக்கிய பொழுதுபல கழியநெஞ்சுபுகல் ஊக்கத்தர் மெய்தயங்(கு) உயக்கத்(து)இன்னார் உறையுள் தாம்பெறின் அல்லதுவேந்(து)ஊர் யானை வெண்கோடு கொண்டுகள்கொடி நுடங்கும் ஆவணம் புக்(கு)உடன்அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்துநாமம் அறியா ஏம வாழ்க்கைவடபுலம் வாழ்நரின் பெரி(து)அமர்ந்(து) அல்கலும்இன்நகை மேய பல்உறை பெறுபகொல்பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழநெடுமண் இஞ்சி நீள்நகர் வரைப்பின்ஓ(வு)உறழ் நெடும்சுவர் நாள்பல எழுதிச்செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்சூல்அணங்(கு)எழில் அரிவையர்ப் பிணிக்கும்மணம்கமழ் மார்பநின் தாள்நிழ லோரே.--------------
Share
கதை

ஏமவாழ்க்கை

ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப்பாடாண்பாட்டு