புதல்சூழ் பறவை
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு
வாங்கிரு மருப்பின் தீம்தொடை பழுனியஇடன்உடைப் பேரியாழ் பாலை பண்ணிப்படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவலஇடிஇசை முரசமொ(டு) ஒன்றுமொழிந்(து) ஒன்னார்வேல்உடைக் குழூஉச்சமம் ததைய நூறிக்கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின்அம்பண அளவை விரிந்(து)உறை போகியஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின்நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்தோல்மிசைத்(து) எழுதரும் விரிந்(து)இலங்(கு) எஃகின்தார்புரிந் தன்ன வாள்உடை விழவின்போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்தகடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப்பூத்த முல்லைப் புதல்சூழ் பறவைகடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு