verse 64 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 64 · உரைசால்வேள்வி

வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்மஅறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கியஉரைசால் வேள்வி முடித்த கேள்விஅந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு)இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்புறம்சிறை வயிரியர்க் காணின் வல்லேஎஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவிஅலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்எனஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்மாஇரு விசும்பில் பல்மீன் ஒளிகெடஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்இதழ்வனப்(பு) உற்ற தோற்றமொ(டு) உயர்ந்தமழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்பசிஉடை ஒக்கலை ஒ஡ணஇயஇசைமேம் தோன்றல்நின் பாசறை யானே.
Share
கதை

உரைசால்வேள்வி

ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · காட்சிவாழ்த்து