மாகூர் திங்கள்
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · செந்துறைப்பாடாண்பாட்டு
பகல்நீ(டு) ஆகா(து) இரவுப்பொழுது பெருகிமாசி நின்ற மாகூர் திங்கள்பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப்புல்இருள் விடியப் புலம்புசேண் அகலப்பாய்இருள் நீங்கப் பல்கதிர் பரப்பிஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்(கு)இரவன் மாக்கள் சிறுகுடி பெருகஉலகம் தங்கிய மேம்படு கற்பின்வில்லோர் மெய்ம்மறை வீற்(று)இரும் கொற்றத்துச்செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம்அறியா(து) எதிர்ந்து துப்பின் குறைஉற்றுப்பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்சினம்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணிபல்வேறு வகைய நனம்தலை ஈண்டியமலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்ஆறுமுட்(டு) உறாஅ(து) அறம்புந்(து) ஒழுகும்நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்பாடுசால் நன்கலம் தரூஉம்நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே.
ஆறாம் பத்து · காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது · பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை · செந்துறைப்பாடாண்பாட்டு