அருவி ஆம்பல்
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு
பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையேபணியா உள்ளமொ(டு) அணிவரக் கெழீஇநட்டோ ர்க்(கு) அல்லது கண்அஞ் சலையேவணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்மகளிர்க்(கு) அல்லது மலர்ப்(பு)அறி யலையேநிலம்திறம் பெயரும் காலை ஆயினும்கிளந்த சொல்நீ பொய்ப்(பு)அறி யலையேசிறிஇலை உழிஞைத் தொயல் சூடிக்கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறிஒருமுற்(று) இருவர் ஓட்டிய ஒள்வாள்செருமிகு தானை வெல்போ ரோயேஆடுபெற்(று) அழிந்த மள்ளர் மாறிநீகண் டனையேம் என்றனர் நீயும்நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்செல்வக் கோவே சேரலர் மருககால்திரை எடுத்த முழங்குகுரல் வேலிநனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின்அடைஅடுப்(பு) அறியா அருவி ஆம்பல்ஆயிர வெள்ள ஊழிவாழி யாத வாழிய பலவே.
ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · செந்துறைப் பாடாண்பாட்டு