verse 67 · Pathitruppathu · Many poets

பதிற்றுப்பத்து 67 · வெண்போழ்க்கண்ணி

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடுபந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்கடன்அறி மரபின் கைவல் பாணதெள்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவைகொல்படை தொ஢ய வெல்கொடி நுடங்கவயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப்பல்களிற்(று) இனநிரை புலம்பெயர்ந்(து) இயல்வரஅமர்க்கண் அமைந்த அவிர்நிணப் பரப்பின்குழூஉச்சிறை எருவை குருதி ஆரத்தலைதுமிந்(து) எஞ்சிய வாள்மலி யூபமொ(டு)உருவில் பேய்மகள் கவலை கவற்றநா(டு)உடன் நடுங்கப் பல்செருக் கொன்றுநா(று)இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்நெறிபடு மருப்பின் இரும்கண் மூரியொடுவளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்எஃ(கு)ஆ(டு) ஊனம் கடுப்பமெய் சிதைந்துசாந்(து)எழில் மறைத்த சன்றோர் பெருமகன்மலர்ந்த காந்தள் மாறா(து) ஊதியகடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப்பறைபண் அழியும் பாடுசால் நெடுவரைக்கல்உயர் நோ஢ப் பொருநன்செல்வக் கோமான் பாடினை செலினே.
Share
கதை

வெண்போழ்க்கண்ணி

ஏழாம் பத்து · கபிலர் பாடியது · பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் · பாணாற்றுப்படை