பழநி
பழநி
தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததானமுகிலள கத்திற் கமழ்ந்த வண்பரிமளஅலர் துற்றக் கலந்தி டந்தருமுகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ...... ரங்கமீதேமுகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்விழியிணை செக்கச் சிவந்து குங்குமம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவிஉகவுயி ரொத்துப் புயங்க ளின்புறவுறவினை யுற்றுத் திரண்டு கொங்களவுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவிஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புறமுறுவளை யொக்கக் கலின்க லென்கவுமுயர்மய லுற்றுற் றிரங்கு மன்பொத ...... ழிந்திடாதோசெகமுழு தொக்கப் பயந்த சங்கரிஅடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரமசிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ...... மங்கைநீடுதிகழ்வன பச்சைப் பசங்கி யம்பணகரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதேபகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகைதிரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும்பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தருபழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
பழநி
Palani