திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் வஸந்தா · தாளம் ஆதி - கண்ட நடை (20)
தனத்தன தனத்தன தனத்தன தனத்தனதனத்தன தனத்தன ...... தனதானஇருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புடனிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சகதலத்தினில் நவிற்றுத ...... லறியாதேதனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடுசமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோகருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படுகனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொருபுறத்தினை யளித்தவர் ...... தருசேயேபுயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணிபொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
திருத்தணிகை · ராகம் வஸந்தா · தாளம் ஆதி - கண்ட நடை (20)
Thiruthani · ragam வஸந்தா · thalam ஆதி - கண்ட நடை (20)