பாடல் 2935 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 107 / 143
கம்பராமாயணம் 2935 · சூர்ப்பணகைப் படலம்
மரன் ஏயும் நெடுங்கானின் மறைந்து உறையும் தாபதர்கள்உரனேயோ ? அடல் அரக்கர் ஓய்வேயோ ? உற்று எதிர்ந்தார்அரனேயோ ? அயனேயோ ? அரியேயோ ? எனும் ஆற்றல்கரனேயோ ! யான் பட்ட கையறவு காணாயோ ?