ஆரணிய காண்டம் · மாரீசன் வதைப் படலம் · பாடல் 209 / 252
மாரீசன் நினைதல்
'' 'தேவியைத் தீண்டா முன்னம் , இவன் தலை சரத்தின் சிந்திப்போம் வகை புணர்ப்பன் ' என்று புந்தியால் புகல்கின்றேற்கும் ,ஆம் வகை ஆயிற்று இல்லை ; ஆர் விதி விளைவை ஓர்வார் ?ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று '' என்று எண்ணா .