3903 அனுமனோடு சுக்கிரீவன் இராமனை யடைதல்
கிட்கிந்தா காண்டம் · நட்புக் கோட் படலம்
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் ,'உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள் அரோ ?பொன்னையே பொருவுவாய் ! போது ' எனப் போதுவான்தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் .
கிட்கிந்தா காண்டம் · நட்புக் கோட் படலம்