பெரும்பாணாற்றுப்படை
அடிகள் 41–50 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலமுருமும் உரறா தரவுந் தப்பாகாட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்கசைவுழி யசைஇ நசைவுழித் தங்கிச்சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங்கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்துமுழவி னன்ன முழுமர வுருளியெழூஉப்புணர்ந் தன்ன பரூஉக்கை நோன்பார்மாரிக் குன்றம் மழைசுமந் தன்னவாரை வேய்ந்த வறைவாய்ச் சகடம்
அவனுடைய காவலையுடைய அகன்ற நாட்டில், வழிப்போவாரைக் கூப்பிடும்படி வெட்டிக் கையிலுள்ள பொருளைக் கவரும் களவே உழவு போலும் வாழ்க்கையாக உடைய கொடியவர் இல்லை. இடியும் இடிக்காது; பாம்பும் கொல்லாது; காட்டுப் புலியும் வருத்தம் செய்யாது. ஆகையால் இளைத்த இடத்தில் இளைப்பாறி, விரும்பிய இடத்தில் தங்கி, நீ செல்வாயாக. மத்தளம் போன்ற குறட்டில் தைத்து, திருத்தமான நிலையையுடைய ஆரிடத்தே வளைந்த மரம் சூழக் கட்டப்பட்ட உருளையையும், கணையமரம் இரண்டு சேர்ந்தாற் போன்ற பருத்த கைகளையுடைய வலிய பாரையையும், மலை மாரிக்காலத்து மேகத்தைச் சுமந்து நிற்பது போலப் புல்லால் வேயப்பட்ட ஒலிக்கும் வாயையுடைய சகடத்தையும் —
In the wide country under his guard there is no cruel folk whose living is a theft that cuts down travellers and takes what they carry. Thunder does not strike there, snakes do not kill, the cats of the forest do no harm. So rest where you are tired, and stay where you wish to stay. There you will find a cart: its wheel fixed in a hub like a drum's frame, the curved felloe bound round with the spokes; its two thick arms like a pair of joined battle-rams; its body thatched with grass so that it stands like a mountain carrying the monsoon cloud.
"களவே உழவு போலும் வாழ்க்கை" என்ற சொற்றொடர் இந்தப் பாடலின் கடுமையான நையாண்டி: கொள்ளையரின் வாழ்க்கை உழவையே போல இருக்கிறது என்றால், அது ஒரு தொழில் போல ஆகிவிட்டது.
அதற்கு எதிராக அவன் நாட்டில் இடியும் பாம்பும் புலியும் தீங்கு செய்யா. அதாவது அரசனின் காவல் இயற்கையின் ஆபத்துகளையும் விலக்குகிறது. இது சங்க மரபில் அரசனின் செங்கோலின் விளைவு.
"A living like the plough, but of theft" is the poem's harshest irony: robbers have turned plunder into a trade, as ordinary as farming.
Against that, in his country even thunder, snakes and tigers do no harm. A king's guard is imagined as reaching past human enemies into nature itself — the standard claim of the straight sceptre in this tradition.
அடிகள் 41–50 · கடியலூர் உருத்திரங் கண்ணனார்
Lines 41–50 · Kadiyalur Uruttirankannanar
அரசன் இயற்கையின் ஆபத்தையும் தடுக்கிறான் என்பது உண்மையான நம்பிக்கையா, கவிதை மொழியா?
Is a king who wards off nature's dangers a real belief, or poetic language?