பாடல் 2632 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருக்கடிக்குளம் · பாடல் 6 / 11

திருக்கடிக்குளம் · 2.104.6

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுனல் அழல்நாகம்போதி லங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக் கழகாகக்காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.
பகிர்