பாடல் 2872 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருவாவடுதுறை · பாடல் 4 / 11

திருவாவடுதுறை · 3.4.4

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
பகிர்