பதிகம் 667 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம்௿ · 6.70

1. தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி௿ தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்௿ கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்௿ வீரட்டங் கோகரணங் கோடி காவும்௿ முல்லைப் புறவம் முருகன் பூண்டி௿ முழையூர் பழையாறை சத்தி முற்றங்௿ கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்௿ கயிலாய நாதனையே காண லாமே.2. ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும்௿ ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்௿ பேரூர் பிரமபுரம் பேரா வூரும்௿ பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்௿ கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங்௿ கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்௿ காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்௿ கயிலாய நாதனையே காண லாமே.3. இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்௿ இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்௿ சடைமுடி சாலைக் குடிதக் களூர்௿ தலையாலங் காடு தலைச்சங் காடு௿ கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்௿ கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு௿ கடைமுடி கானூர் கடம்பந் துறை௿ கயிலாய நாதனையே காண லாமே.4. எச்சில் இளமர் ஏம நல்லூர்௿ இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி௿ அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்௿ ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்௿ கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்௿ கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி௿ கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்௿ கயிலாய நாதனையே காண லாமே.5. கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர்௿ கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்௿ நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும்௿ நின்றியூர் நீடூர் நியம நல்லூர்௿ இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர்௿ எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்௿ கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங்௿ கயிலாய நாதனையே காண லாமே.6. மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்௿ வக்கரை மந்தாரம் வார ணாசி௿ வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி௿ விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்௿ பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்௿ பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்௿ கண்ணை களர்க்காறை கழிப்பா லையுங்௿ கயிலாய நாதனையே காண லாமே.7. வீழி மிழலைவெண் காடு வேங்கூர்௿ வேதி குடிவிசய மங்கை வியலூர்௿ ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை௿ ஆலங் காடும் அரைதைப் பெரும்௿ பாழி பழனம்பனந் தாள்பா தாளம்௿ பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்௿ காழி கடல்நாகைக் காரோ ணத்துங்௿ கயிலாய நாதனையே காண லாமே.8. உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்௿ உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்௿ மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்௿ வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்௿ வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா௿ வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்௿ கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்௿ கயிலாய நாதனையே காண லாமே.9. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி௿ தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை௿ கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்௿ குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு௿ அண்டர் தொழுமதிகை வீரட் டானம்௿ ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்௿ கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்௿ கயிலாய நாதனையே காண லாமே.10. நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு௿ நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல௿ துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை௿ தோணிபுரந் துருத்தி சோமீச் சரம்௿ உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர்௿ ஓமாம் புலியூரோர் ஏட கத்துங்௿ கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங்௿ கயிலாய நாதனையே காண லாமே.11. புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்௿ புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்௿ வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்௿ வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி௿ நிலமலிநெய்த் தானத்தோ டெத்தா னத்தும்௿ நிலவுபெருங் கோயில்பல கண்டாற் றொண்டீர்௿ கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற௿ கயிலாய நாதனையே காண லாமே.
பகிர்