பதிகம் 670 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருவலஞ்சுழியும் – திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் · 6.73

1. கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்௿ கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்௿ பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்௿ பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்௿ வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿ மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்௿ குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.2. கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்௿ கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்௿ அலைக்கங்கை செஞ்சடைமே லேற்றான் கண்டாய்௿ அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்௿ மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி௿ வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿ குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்௿ கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.3. செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்௿ சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்௿ பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்௿ பாலோடு நெய் தயிர்தே னாடி கண்டாய்௿ மந்தார முந்தி வருநீர்ப் பொன்னி௿ வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்௿ கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.4. பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்௿ புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்௿ இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்௿ எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்௿ மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்௿ வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்௿ கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்௿ கோடீச்சரத் துறையுங் கோமான் றானே.5. அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்௿ அருமறைக ளாறங்க மானான் கண்டாய்௿ தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்௿ சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்௿ மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி௿ வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்௿ கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.6. சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்௿ சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்௿ தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்௿ சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்௿ மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿ மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்௿ கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.7. அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்௿ அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்௿ பணமணிமா நாக முடையான் கண்டாய்௿ பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்௿ மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿ மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்௿ குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.8. விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்௿ வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்௿ அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்௿ அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்௿ வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿ வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்௿ குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.9. தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்௿ தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்௿ இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்௿ எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்௿ வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்௿ மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்௿ குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.10. விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்௿ விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்௿ தண்டா மரையானும் மாலுந் தேடத்௿ தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்௿ வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்௿ மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்௿ கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்௿ கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
பகிர்