பதிகம் 666 · தேவாரம் · திருஞானசம்பந்தர் · திருநாவுக்கரசர் · சுந்தரர்

திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம்௿ · 6.69

1. ஆராத இன்னமுதை அம்மான் றன்னை௿ அயனொடுமா லறியாத ஆதி யானைத்௿ தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்௿ சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை௿ நீரானைக் காற்றானைத் தீயா னானை௿ நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த௿ பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.2. விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை௿ வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்௿ சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்௿ தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை௿ அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க௿ அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்௿ படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.3. பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்௿ புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை௿ வேதியனை வெண்காடு மேயான் றன்னை௿ வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்௿ ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை௿ அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்௿ பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.4. போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்௿ பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை௿ வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை௿ மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்௿ தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்௿ சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே௿ பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.5. அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்௿ அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்௿ கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்௿ கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே௿ தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்௿ தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்௿ படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.6. கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்௿ கனலாடு திருமேனி கமலத் தோன்றன்௿ சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்௿ திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்௿ வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்௿ மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்௿ பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.7. நதியாருஞ் சடையானை நல்லூ ரானை௿ நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை௿ மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை௿ மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை௿ நிதியாளன் றோழனை நீடு ரானை௿ நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்௿ பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.8. நற்றவனை நான்மறைக ளாயி னானை௿ நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்௿ செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்௿ திருவாரூர்த் திருமூலத் தான மேய௿ கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்௿ குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்௿ பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.9. ஊனவனை உடலவனை உயிரா னானை௿ உலகேழு மானானை உம்பர் கோவை௿ வானவனை மதிசூடும் வளவி யானை௿ மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற௿ கானவனைக் கயிலாய மலையு ளானைக்௿ கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே௿ பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.10. தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்௿ தடவரையை இருபதுதோள் தலையி னாலும்௿ எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி௿ எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்௿ கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்௿ குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று௿ படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்௿ பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
பகிர்