பாடல் 7705 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருக்கானாட்டுமுள்ளூர் · பாடல் 7 / 11
திருக்கானாட்டுமுள்ளூர் · 7.40.7
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேற்கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.