பாடல் 7906 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருவாரூர் · பாடல் 9 / 11
திருவாரூர் · 7.59.9
விடக்கை யேபெருக் கிப்பல நாளும் வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன் கண்கு ழிந்திரப் பார்கையி லொன்றும்இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் சடையா னைஉமை யாளையோர் பாகத்தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை ஆரூ ரானை மறக்கலு மாமே.