திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் தோடி/அடாணா · தாளம் அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)
தந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதன ...... தனதானதொந்தி சரிய மயிரே வெளிறநிரைதந்த மசைய முதுகே வளையஇதழ்தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடிதொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்கிண்கி ணெனமு னுரையே குழறவிழிதுஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகிவந்த பிணியு மதிலே மிடையுமொருபண்டி தனுமெ யுறுவே தனையுமிளமைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவிமங்கை யழுது விழவே யமபடர்கள்நின்று சருவ மலமே யொழுகவுயிர்மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்எந்தை வருக ரகுநா யகவருகமைந்த வருக மகனே யினிவருகஎன்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராமஇங்கு வருக அரசே வருகமுலையுண்க வருக மலர்சூ டிடவருகஎன்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்சிந்தை மகிழு மருகா குறவரிளவஞ்சி மருவு மழகா அமரர்சிறைசிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீராதிங்க ளரவு நதிசூ டியபரமர்தந்த குமர அலையே கரைபொருதசெந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் தோடி/அடாணா · தாளம் அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)
Thiruchendur · ragam தோடி/அடாணா · thalam அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)