பாடல் 71 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 71 · திருச்செந்தூர்

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்தனத்தத் தந்தனம் ...... தனதானநிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்நிறத்திற் கந்தனென் ...... றினைவொரைநிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும்புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும்புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயேமதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும்மறத்திற் றந்தைமன் ...... றினிலாடிமழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண்டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனேகுதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங்கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வேகுறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
பகிர்
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர் · ராகம் தந்யாஸி · தாளம் ஸங்கீர்ணசாபு (4 1/2)

A story

Thiruchendur · ragam தந்யாஸி · thalam ஸங்கீர்ணசாபு (4 1/2)