திருக்களந்தை ஆதித்தேச்சரம்
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்
பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு)அரியரே பாவியேன் செய்யும்பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப்பிச்சரே நச்சரா மிளிரும்குழையராய் வந்தெந் குடிமுழு தாளும்குழகரே ஒழுகுநீர்க் கங்கைஅழகரே யாகில் அவரிடம் களந்தைஅணிதிகழ் ஆதித்தேச் சரமே.
கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்களந்தை ஆதித்தேச்சரம்