முல்லை · பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்
வினைமுற்றிய தலைமகன்தேர்ப்பாகற்குச் சொல்லியது. · பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் பாடியது
படுமழை பொழிந்த பயமிகு புறவின்நெடுநீர் அவல பகுவாய்த் தேரைசிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்குறும்புதல் பிடவின் நெடுங்கால் அலரிசெந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்பவெஞ்சின அரவின் 1பைஅணந் தன்னதண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத்திரிமருப்பு இரலை தெள்ளறல் பருகிக்காமர் துணையொடு ஏமுற வதியக்காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழிஓடுபரி மெலியாக் கொய்சுவல் புரவித்தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்பஊர்மதி வலவ தேரே சீர்மிகுபுநம்வயிற் புரிந்த கொள்கைஅம்மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே.
Patumazhai pozhintha payamiku puravin / Netuneer avala pakuvaayth thaerai / Sirupal iyaththin netunerik karangkak / Kurumputhal pitavin netungkaal alari / Sennila marungkin nunayir varippa / Venjina aravin 1paianan thanna / Thankamazh koatal thaathupini avizhath / Thirimaruppu iralai thellaral parukik / Kaamar thunaiyotu aemura vathiyak / Kaatukavin perra thanpathap peruvazhi / Oatupari meliyaak koysuval puravith / Thaalthaazh thaarmani thayangkupu iyampa / Oormathi valava thaerae seermikupu / Namvayir purintha kolkai / Ammaa arivaiyaith thunnukam virainthae.
வினைமுற்றிய தலைமகன்தேர்ப்பாகற்குச் சொல்லியது. · பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் பாடியது