poem 1 · Purananuru · Many poets

புறநானூறு 1 · இறைவனின் திருவுள்ளம் · பெருந்தேவனார்

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்வண்ண மார்பின் தாருங் கொன்றை;ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்தசீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறைமறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறைபதினெண் கணனும் ஏத்தவும் படுமே;எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,நீரறவு அறியாக் கரகத்துத்,தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
Share
கதை

இறைவனின் திருவுள்ளம் · பெருந்தேவனார்

பாடப்பட்டோன்: இறைவன்