poem 7 · Purananuru · Many poets

புறநானூறு 7 · வளநாடும் வற்றிவிடும் · கருங்குழல் ஆதனார்

களிறு கடைஇய தாள்,கழல் உரீஇய திருந்துஅடிக்,கணை பொருது கவிவண் கையால்,கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்துமா மறுத்த மலர் மார்பின்,தோல் பெயரிய எறுழ் முன்பின்,எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்கொள்ளை மேவலை; ஆகலின், நல்லஇல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்துமீனின் செறுக்கும் யாணர்ப்பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.
Share
கதை

வளநாடும் வற்றிவிடும் · கருங்குழல் ஆதனார்

திணை: வஞ்சி · துறை: கொற்ற வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம் · பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்