தாயற்ற குழந்தை · பரணர்
திணை: வஞ்சி · துறை: கொற்ற வள்ளை. சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும் · பாடப்பட்டோன்: சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி
வாள்,வலந்தர, மறுப் பட்டனசெவ் வானத்து வனப்புப் போன்றன!தாள், களங்கொளக், கழல் பறைந்தனகொல் ஏற்றின் மருப்புப் போன்றன;தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,கறுழ் பொருத செவ் வாயான்,எருத்து வவ்விய புலி போன்றன;களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,நுதி மழுங்கிய வெண் கோட்டான்,உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,மாக் கடல் நிவந் தெழுதரும்செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!அனையை ஆகன் மாறே,தாயில் தூவாக் குழவி போல,ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
திணை: வஞ்சி · துறை: கொற்ற வள்ளை. சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும் · பாடப்பட்டோன்: சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி