கதிர்நிகர் ஆகாக் காவலன் · கபிலர்
திணை: பாடாண் · துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம் · பாடப்பட்டோன்: சேரமான் கடுங்கோ வாழியாதன்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,கடந்து அடு தானைச் சேரலாதனையாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;அகல்இரு விசும்பி னானும்பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.
திணை: பாடாண் · துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம் · பாடப்பட்டோன்: சேரமான் கடுங்கோ வாழியாதன்