poem 5 · Purananuru · Many poets

புறநானூறு 5 · அருளும் அருமையும் · நரிவெரூஉத் தலையார்

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,கானக நாடனை!நீயோ, பெரும!நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;அருளும் அன்பும் நீக்கி நீங்காநிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,குழவி கொள் பவரின், ஓம்புமதி!அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
Share
கதை

அருளும் அருமையும் · நரிவெரூஉத் தலையார்

திணை: பாடாண் · துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம். சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி · பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்