poem 11 · Purananuru · Many poets

புறநானூறு 11 · பெற்றனர்! பெற்றிலேன் · பேய்மகள் இளவெயினியார்

அரி மயிர்த் திரள் முன்கைவால் இழை, மட மங்கையர்வரி மணற் புனை பாவைக்குக்குலவுச் சினைப் பூக் கொய்துதண் பொருநைப் புனல் பாயும்விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்பாடல் சான்ற விறல்வேந் தனும்மேவெப் புடைய அரண் கடந்து,துப்புறுவர் புறம்பெற் றிசினே:புறம் பொற்ற வய வேந்தன்மறம் பாடிய பாடினி யும்மே,ஏர் உடைய விழுக் கழஞ்சின்,சீர் உடைய இழை பெற்றிசினே!இழை பெற்ற பாடி னிக்குக்குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.என ஆங்கு,ஒள்அழல் புரிந்த தாமரைவெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
Share
கதை

பெற்றனர்! பெற்றிலேன் · பேய்மகள் இளவெயினியார்

திணை: பாடாண் · துறை: பரிசில் கடாநிலை · பாடப்பட்டோன்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ