நீரும் நிலனும் · குடபுலவியனார்
திணை: பொதுவியல் · துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம் · பாடப்பட்டோன்: பாண்டியன் நெடுஞ்செழியன்
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்பரந்து பட்ட வியன் ஞாலம்தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇயபெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்பூக் கதூஉம் இன வாளை,நுண் ஆரல், பரு வரால்,குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;வான் உட்கும் வடிநீண் மதில்;மல்லல் மூதூர் வய வேந்தே!செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்தநல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்தகுதி கேள், இனி, மிகுதியாள!நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;உண்டி முதற்றே உணவின் பிண்டம்;உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;நீரும் நிலனும் புணரியோர் ஈண்டுஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே;வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,அடுபோர்ச் செழிய! இகழாது வல்லேநிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
திணை: பொதுவியல் · துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம் · பாடப்பட்டோன்: பாண்டியன் நெடுஞ்செழியன்